கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு உணவு ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்..
மாணவிக்கு உணவு ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்..ANI
Published on
Updated on
1 min read

காலை உணவுத் திட்டம் கற்றலை மேம்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதன்மைத் திட்டமான காலை உணவுத் திட்டம், மாநிலத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணிசமான சுகாதார மற்றும் கல்வி நன்மைகளை வழங்கியுள்ளதாக மாநில திட்டக்குழு கண்டறிந்துள்ளது.

இதையும் படிக்க: ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்! இந்த வாரம் 5 தமிழ் படங்கள்!

இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்து பார்க்காத வகையில் நமது சமூகத்தையும் மாற்றுகிறது. காலை உணவுத்திட்டம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்துள்ளது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடையே உடல்நலக் குறைவுகளை குறைத்திருக்கிறது. குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதும் குறைந்துள்ளது.

சத்தான உணவுகள் குழந்தைகளை பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்து பாலின இடைவெளியை குறைத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com