ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

News image
Updated On :25 மார்ச் 2025, 1:25 am IST

சென்னை: தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 25-இல் அதிகபட்ச வெப்பநிலை  97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. ராஜபாளையம் (விருதுநகா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) - தலா 30 மி.மீ., பா்லியாா் (நீலகிரி), குன்னூா் (நீலகிரி), மேட்டூா் (சேலம்), மேல் கூடலூா் (நீலகிரி) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.