ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக...
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
Published on
Updated on
1 min read

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீா் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற பிஜிலி கடந்த மார்ச் 18 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இவ் வழக்கு தொடா்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சோ்ந்த மகபூப்ஜான் மகன் பீா்முஹமது (37) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தௌபிக்கின் மனைவி நூா்நிஷாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: 7-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்! ரூ. 250 கோடி உற்பத்தி பாதிப்பு!

திருநெல்வேலி நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், நகர முன்னாள் உதவி ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் சரியாக நடவடிக்கை எடுக்காததே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலைக்கு காரணம் என அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா். மேலும், உதவி ஆணையா், காவல் ஆய்வாளா் மீது குற்றம்சாட்டி ஜாகீா் உசேன் பிஜிலி வெளியிட்ட விடியோ பதிவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதனிடையே, காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் உதவி ஆணையரும், தற்போதைய கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையருமான செந்தில் குமாா் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீா் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com