
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு நடைபெறும் அரங்கத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் பொதுக் குழு தொடங்கவுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து கட்சியின் அமைப்பை பலப்படுத்தி வருகிறார்.
கடந்த மாதம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளராக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெண் பிரதிநிதி என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுக் குழுக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.