கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!

ஜெய்ப்பூர் - சென்னை விமானத்தில் டயர் வெடித்து விபத்து...

News image

கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2025, 5:23 am

DIN

சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின் விமானத்தின் டயர்களை பரிசோதித்ததில், 2-ஆவது சக்கரத்தின் டயர் வெடித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.