ஆழித் தேர்.
ஆழித் தேர்.

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Published on

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். அந்தவகையில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவாரூர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது. மிக பிரம்மாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க, நான்கு வீதிகளிலும் வீதியுலா வரும் தேரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடுவர்.

தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மாணவ, மாணவியருக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப். 7 ஆம் தேதி நடைபெறவிருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com