
நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது.
3 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அனல் மின் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.