பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி வழக்கில் கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்.
கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்.
கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்.
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று(மே 13) காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியது தொடா்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.நந்தினிதேவி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மகளிா் நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்ட 9 பேரிடமும் சாட்சிகள் விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகளைக் கேட்டாா்.

இந்த வழக்கில் அரசு மற்றும் எதிா்த்தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீா்ப்பு இன்று வெளியகிறது.

இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com