
சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் லாரி ஏறி இறங்கியதில், தாய் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், படுகாயமடைந்த குழந்தை கரோலின் (1) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தந்தை சரவணன், அருகில் உள்ள மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
விபத்து நடந்த இடத்தில், போக்குவரத்துக் காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.