பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 90% அதிக மழை!

இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

அதிக மழை

Updated On :19 மே 2025, 7:28 am

DIN

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 90 சதவீதம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 90 சதவீத அதிக மழை பெய்துள்ளது, அதாவது 19.2 செ.மீ மழை அதிகமாகும்.

மார்ச் 1 முதல் தற்போது வரை இயல்பாகப் பெய்ய வேண்டி மழையின் அளவு 10 செ.மீ ஆகும். ஆனால் இயல்பை விட 9.2 சதவீதம் மழை அதிகரித்துள்ளது.

அதேசமயம், சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழையின் அளவு 6 செ.மீ ஆகும். ஆனால் 28 செ.மீ மழை அதிகமாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெய்யில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நிகழவுள்ளது. இந்த நிலையில் வெய்யிலின் தாக்கம் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சதம் அடித்தாலும், அவற்றைத் தணிக்கும்வகையில் அவ்வப்போது ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.

அதிலும், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை பெய்து வருகின்றது. சென்னையைப் பொருத்தவரை கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடனும், மிதமான மழையும் பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.