ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :19 மே 2025, 6:06 am

DIN

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்.

மழைக் காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.