தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்றும் அதற்கு மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமீபத்தில் கனவு மெய்ப்படும் நிகழ்ச்சியில் 'ஸ்டாலின் வாக்குறுதிகள்' என்ற 14 முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதனைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை ஸ்டாலின் வாக்குறுதிகள் என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்
தொழில் துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
கால்நடை - பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு - மீனவர்கள் வாழ்வு மேம்பாடு
நகராட்சி நிருவாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்
சிறு - குறு நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்
நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள்
வீட்டு வசதித் துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்
உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா
இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Dravidian model must continue for the complete development of Tamil Nadu: MK stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக உள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து!

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


