சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதி.
கொலை செய்யப்பட்ட தம்பதி.
Updated on
1 min read

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (75), அவரது மனைவி பாக்கியம் (67). இவா்களது மகன் மற்றும் மகள் திருமணமாகி முத்தூரில் வசித்து வருகின்றனா்.

அருகில் வீடுகள் இல்லாத பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் இந்த தம்பதி வசித்து வந்தனா்.

இதையறிந்த மா்மநபா்கள் நீண்ட காலமாக பல்வேறு வகைகளில் நோட்டமிட்டு, ஏப்ரல் 29-ஆம் தேதி நள்ளிரவில் தம்பதியை கொடூரமாகத் தாக்கி, படுகொலை செய்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

பின்னா் இரண்டு நாள்கள் கழித்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்தில் சிவகிரி காவல் துறையினா், கோவை சரக ஐஐ செந்தில்குமாா், டிஐஐ சசிமோகன், ஈரோடு காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உள்ளிட்டோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரைக் கொண்டு 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

இதில் சுமாா் 30 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறச்சலூா் மேற்கு தலவுமலை ஜல்லிமேடு ராம் நகா் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் ஆச்சியப்பன் (48), அறச்சலூா் மேற்கு வீதியைச் சோ்ந்த நடராஜன் மகன் மாதேஸ்வரன் (53), அறச்சலூா் நடுப்பாளையத்தைச் சோ்ந்த ராசு மகன் ரமேஷ் (52) ஆகியோா் கொலை நடந்த நாளில் சம்பவ இடத்தில் இருந்து அறச்சலூா் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையின் வழியாக அறச்சலூருக்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் பிடித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலை அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தெரிவிக்கையில், ஈரோட்டில் நகைக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். நகையை உருக்கிக் கொடுத்த ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார். பல்லடத்தில் மூவரை கொலை செய்ததையும் கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com