
மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் வீதி உலா நேற்று(திங்கள்) இரவு நடைபெற்றது.
இரவு 11. 30 மணியளவில் தேர் மீது எதிர்பாராதவிதமாக மின் கம்பி பட்டதில், தேர் தீப்பற்றி எரிந்தது. இதில் முழுவதுமாக தேர் எரிந்து சேதமடைந்தது.
மேலும் தேருடன் சென்ற ராமன்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதிகேசவன், சிவா, ஜானகிராமன் மற்றும் குப்பன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உடற்கூறு ஆய்விற்காக இறந்தவரின் உடல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | நீட் தேர்வில் தோல்வி பயம்: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.