கூட்டணி பற்றிய அறிவிப்பு எப்போது? - பிரேமலதா பதில்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
premalatha
பிரேமலதா (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாமக்கலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இங்கு வந்திருக்கிறேன். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவிருக்கிறோம். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது, எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பதை அறிவிப்போம்.

அதற்கு முன்பாக 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது. பின்பு நானும் விஜய பிரபாகரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். தொண்டர்களையும் மக்களையும் சந்திக்கவிருக்கிறோம். அதன்பிறகுதான் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "தமிழ்நாட்டில் பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது, சமீபத்தில்தான் பொள்ளாச்சி வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதற்கு நான் தலைவணங்குகிறேன். பெண்களை தவறாகப் பயன்படுத்தும் நிலை மாற வேண்டும். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இருக்கிறது. இதற்கு காரணம் மது, கஞ்சா. இளைஞர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டும்தான் இதற்கு தீர்வு காண முடியும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com