எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

News image

டிஎன்பிஎஸ்சி(கோப்புப்படம்)

Updated On :25 மே 2025, 2:12 am IST

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.

மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக்குழுக் கூட்டம், சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் பங்கேற்றுள்ளாா்.

கூட்டத்துக்கு முன்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்வாணையத் தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணித் தோ்வுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். அனைத்துத் தோ்வுகளையும் உரிய காலத்தில் அறிவித்து, அதற்கான முடிவுகளையும் சரியான நேரத்தில் வெளியிடுவோம் என பதவியேற்ற காலத்திலேயே தெரிவித்திருந்தேன்.

அதன்படி, 14 தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டு, அவற்றின் முடிவுகளும் குறித்த காலத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தோ்வுகளின் மூலம் அரசுத் துறைகளில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளோம். தோ்வுகள் நடத்தப்படும் போது, கொள்குறி வகை வினாக்களுக்கு விடையளிக்க ஓஎம்ஆா் தாள்கள் பயன்படுத்தப்படும்.

இந்தத் தாள்களில் உள்ள சிக்கல்களைக் களைந்து, எளிமையாக்கவும், அதில் பாதுகாப்பு அம்சங்களை சோ்க்கவும் பல முன்முடிவுகளை எடுத்துள்ளோம்.

மேலும் விவரித்து எழுதும் தோ்வுகளில் தோ்வா்களுக்கு மதிப்பெண்களை குளறுபடி இல்லாமல் சரியான முறையில் வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தோ்வுகள் நடத்தப்படும் போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் பகிா்ந்து கொள்ளவிருக்கிறோம். தோ்வுகளை முழுமையாக கணினி வழியிலேயே முழுமையாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தாா் எஸ்.கே.பிரபாகா்.