நீலகிரியில் அதிகனமழை: அவலாஞ்சியில் 35 செ.மீ. மழைப்பதிவு! முழு விவரம்

நீலகிரியில் அதிகனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அவலாஞ்சியில் 35 செ.மீ. மழைப் பதிவாகியிருக்கிறது.
நீலகிரியில் அதி கனமழை
நீலகிரியில் அதி கனமழை
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 35 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதுபோல, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. சிறுவாணி அணை அடிவாரம் பகுதியில் 12.8 செ.மீ., சின்கோனா - 12.4 செ.மீ., வால்பாறை - 11.4 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

கரை புரண்டு ஓடும் வெள்ளநீர்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த அதிகன மழையால் பவானிசாகர் அணையின் முக்கியமான நீர் ஆதாரமான மோயாறு நதியில் நேற்று இரவு முதல் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது.

தென்காசி அருவிகளில்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யலாம் என்ற நிலையில் சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நான்கு மாவட்டங்கள்

தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேரளத்துக்கு ஆரஞ்சு - சிவப்பு எச்சரிக்கை

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பரவலாக மழை

மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கோரிபாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பழங்காநத்தம், வள்ளுவர் காலனியில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதுபோல, திருப்பாலை, ஆத்திக்குளம், புதூர் உள்ளிட்டப் பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com