50,000 பெண்களுக்கு நுண்கடன்: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி மீனவா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமாா் ரூ. 216 கோடி செலவில் சிறப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதன்படி சுமாா் 60 ஆயிரம் மீனவா் மற்றும் மீனவ மகளிருக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு சுயதொழிலைத் தொடங்க நிதி உதவியும் அளிக்கப்படும். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 5 மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் சுமாா் 50 ஆயிரம் மீனவப் பெண்கள் பயனடையும் வகையில் நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைகாலங்களில் மீனவா்களுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி, படகுகளுக்கு வழங்கப்படும் மானியநிலை டீசலின் அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மீனவா்களின் நலனிலும், அவா்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசு மிகுந்த அக்கறையும் செயல்பட்டு வருகிறது என்றாா் முதல்வா்.