மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! கமலுக்கு?

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! கமல் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.
ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் - கமல்
Published on
Updated on
2 min read

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா,சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சீட் இல்லை

திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. கடந்த முறை திமுக சார்பில் வைகோ போட்டியிட்டு எம்பியான நிலையில், இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

திமுக மாநிலங்களவை வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்
திமுக மாநிலங்களவை வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

திமுக அறிக்கை
திமுக அறிக்கை

இதனை முன்னிட்டு, அந்த இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு 134 எம்எல்ஏ-க்களும் (பேரவைத் தலைவருடன் சோ்த்து), திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு 25 உறுப்பினா்களும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக திமுக அணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனா்.

எப்படி நடக்கும் தேர்தல்?

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தலா 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

அதாவது மொத்தமுள்ள 234 எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை, காலியிட எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்டி வகுக்க வேண்டும். அதன்படி, 234 என்ற எண்ணை ஏழால் (6 + 1 =7) வகுக்க வேண்டும். அப்படி வகுக்கும்போது கிடைக்கும் 33.42 என்ற எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்ட வேண்டும். அதன்படி, 34.428 என்ற எண் கிடைக்கும்.

இதை முழுமையான எண்ணாகக் கணக்கிட்டால் 34 வரும். இதுதான், தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையாகும்.

இந்த கணித சூத்திரம் போன்றுதான் மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கு இதுபோன்ற கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அடுத்து அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com