
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(மே 30) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று(மே 30, வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 31) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.