tn rain
கோப்புப்படம்

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய மழை நிலவரம் பற்றி..
Published on

தமிழகத்தில் நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

ஜன. 27ல் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர, நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை..

ஜன. 27 முதல் 31 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (27-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஜன. 27, 28 ஆகிய தேதிகளிலி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Summary

The meteorological department has stated that there is a possibility of rain in two districts of Tamil Nadu, including Nilgiris.

tn rain
ரஷியாவின் போரில் சண்டையிட ஏமாற்றப்படும் வங்கதேச தொழிலாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com