இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்(கோப்புப்படம்)
Updated on
1 min read

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும், ஒரு நாளில் பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் மே 31ஆம் தேதி நிலவரப்படி 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். தற்போது மாநில அரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயது 60.

பொதுவாக, தமிழக அரசு ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில்தான் பணி ஓய்வு பெறுவார்கள். எனவேதான் மே மாதங்களில் அதிகம் பேர் பணி ஓய்வு பெறுவது இத்தனை காலமாக வழக்கத்தில் இருந்துள்ளது.

இதற்குக் காரணம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த கல்வியாண்டு முடிவு பெறும்போது அதாவது மே மாதங்களில்தான் பணி ஓய்வு பெறுவார்கள் என்பதால், ஏராளமான ஆசிரியர்கள் இன்றுடன் அதாவது மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால்தான், ஒரே நாளில் சுமார் 8,144 பேர் பணி ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com