நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங் என 6000 பேரை பணிநீக்கம் செய்தது குறித்து மைக்ரோசாஃப்ட் விளக்கம்

News image

கணினி அறிவியல் - Center-Center-Chennai

Updated On :31 மே 2025, 2:42 pm IST

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.

நாதெல்லா கொடுத்திருக்கும் விளக்கத்தில், இந்த பணிநீக்க நடவடிக்கையானது, நிறுவனத்தின் உள் கட்டமைப்புகளின் சீரமைப்பு பணிக்காக எடுக்கப்பட்டதே தவிர, பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையிலானது அல்ல.

இது செயல்திறனை விட மறுசீரமைப்பு பற்றியது, என்று தலைமை நிர்வாக அதிகாரி மைக்ரோசாப்ட் ஊழியர்களிடம் கூறினார், அதே நேரத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக, எதிர்காலம் இருப்பதாக நம்பும் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக கவனம் செலுத்தும் வகையில்தான், நிறுவனம் அதன் முன்னுரிமைகளை மறுசீரமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் அலுவலக டவுன் ஹால் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை பிராடக்ட் அதிகாரி அபர்ணா சென்னபிரகதா, செயற்கை நுண்ணறிவு வருகையால், கோடிங் அல்லது கணினி அறிவியல் படிப்பது வீணாகிப் போகிறது என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

"மக்கள் கணினி அறிவியலைப் படிக்கக்கூடாது அல்லது கோடிங் செத்துவிட்டது என்ற கருத்தை நான் அடிப்படையில் ஏற்கவில்லை," என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அதிக செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன்களை விரிவுபடுத்துவதையும், பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளில் அதன் உதவிகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் முன்னுரிமைகளில் ஏற்படும் இந்த மாற்றம்தான், பல்வேறு பணிநிலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

குறிப்பாக தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொறியியலில், அவை மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது படிப்படியாக சிலவற்றை அகற்றும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.