நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் சா்ச்சையாகியுள்ள நிலையில், தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) பணியாற்றிய 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘என்டிஏ சீரமைக்கப்பட்டு, கூடுதல் சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நீட் வினாத்தாள் கசிவு தொடா்பாக, என்டிஏவில் பணியாற்றிய 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கையெடுக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தாா்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு எதிராக மாணவா்கள் தீவிரமாகப் போராடிவரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயா் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலராக இருந்த வினீத் ஜோஷியை, மத்திய ஊராட்சித் துறைச் செயலராக மத்திய அரசு வியாழக்கிழமை நியமித்தது. அவா் என்டிஏவின் தலைமை இயக்குநராகவும் பதவி வகித்திருந்த நிலையில், தற்போது 47 அதிகாரிகளை என்டிஏ பணிநீக்கம் செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இப்படியே தொடர விட முடியாது! நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு: பிரதமர் மோடி

வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் - பிரதமா் மோடி அறிவிப்பு!

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



