மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
dmk office
அண்ணா அறிவாலயம் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் 50 வயது கடந்த நிர்வாகிகள் தங்களது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அதன் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இதையடுத்து, மதுரை உத்தங்குடியில் சுமாா் 20 ஏக்கரில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் சுமாா் 10 ஆயிரம் போ் அமரும் வகையிலான பிரம்மாண்டமான அரங்கம், 100 போ் அமரக் கூடிய அளவில் கூட்ட மேடை, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மதராஸி படப்பிடிப்பு நிறைவு!

மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தைப் போன்ற வடிவிலான முகப்புத் தோற்றமும், கூட்ட அரங்கத்தின் முன்பாக மேடையுடன் 100 அடி உயரத்தில் திமுக கொடிக் கம்பமும் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணியளவில் தொடங்கும் இந்தக் கூட்டம், பகல் ஒரு மணி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தலுக்கு முந்தைய திமுக மாநிலப் பொதுக் குழு கூட்டம் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com