சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.
சில நாள்களுக்கு முன் மதராஸியின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியது. இந்த நிலையில், அங்கு சிவகார்த்திகேயனுக்கும் வித்யூத் ஜம்வாலுக்கும் இடையேயான சண்டைக்காட்சியுடன் படப்படிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நானும் அம்மாவும் பெருமையடைகிறோம்... மகனை வாழ்த்திய தனுஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மார்ஷல் அப்டேட்!
அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!

விருமாண்டி சிவகார்த்திகேயன்... சேயோன் புரோமோ!
சேயோன் - சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

