
கடந்த 25 நாள்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கடந்த ஆண்டைவிட தற்போதே 2.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதைப் பார்க்கையில் மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.