பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி வகித்த ஆர். ராஜகோபால், ஐ.ஏ.எஸ். (ஓய்வு), இன்று தமிழக பாஜக-வில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்தார்  தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி வகித்த ஆர். ராஜகோபால், ஐ.ஏ.எஸ். (ஓய்வு), இன்று தமிழக பாஜக-வில் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் கரு. நாகராஜன், M. சக்ரவர்த்தி, V.P. துரைசாமி, தமிழக பாஜக மாநிலச் செயலாளரும் முன்னாள் சென்னை மேயருமான கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாட்டின் நிர்வாகத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராஜகோபால், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பல துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றவர். ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், நுண்ணறிவுடன் முடிவெடுப்பவராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு காணும் புதிய வளர்ச்சிக்கு படித்தோர், அறிந்தோர், நேர்மையாளர், திறமைமிக்க இளைஞர்கள் அனைவரும் கட்சியில் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்த நிகழ்வின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜகோபாலுக்கு எனது இருதயப் பூர்வமான வரவேற்பும், நல் வாழ்த்துகளும்! நாட்டுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும், நம்முடன் அவரது பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com