ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் யார்? ராமதாஸ் - அன்புமணி போட்டி!
பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருவர் நியமிக்கப்பட்டதால் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது.
பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக கி. லோகநாதன், இன்று (மே 31) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு சோளிங்கர், அரக்கோணம் ஆகிய இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதே சமயத்தில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வழக்குரைஞர் க. சரவணன் தொடர்வார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இருவரின் அறிக்கையால் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.