

வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
தெற்கு மியான்மா் கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மியான்மர்- வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இருப்பினும், இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையே, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) முதல் நவ.7 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.