

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தீவுத்திடலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவம் குறித்து முதல்வர் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். நானும் பேட்டி அளித்திருக்கிறேன். நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. உண்மையாக யார் பேட்டி கொடுக்க வேண்டுமோ, அவர் இதுவரை பேசவில்லை.
அவரிடம்தான் கேட்க வேண்டும். அஜித் பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, அது அவரது சொந்த கருத்து. எந்த கருத்தானாலும் பாராட்டக்குரியது. தங்களுக்கு பாதகமாக இருக்கக் கூடிய வாக்குகளை நீக்கும் பணிகளில் பாஜக ஈடுபடுகிறது. குறிப்பிப்பாக, தேர்தல் நடக்கும் இடங்களில் தங்களுக்கு சாதகமாக உள்ளதை வைத்து பாதகமான பணிகளில் பாஜக ஈடுபடுகிறது.
பிகாரில் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அமைச்சர் நேரு மீதான குற்றச்சாட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்பட்டது. நாங்கள் அதனை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.