

கடல் கடந்து வந்து தனது காதலரை கரம் பிடித்தார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண். தமிழ் முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது இவர்கள் திருமணம்.
தஞ்சாவூர் பூதலூர் கூடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விலினா பெர்கன். இவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டில் ஐ.டி. கம்பெனியில் 10 வருடங்களாக ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.
ஒன்றாக பணிபுரிந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இரண்டு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் இன்று தமிழ் முறைப்படி தஞ்சையில் திருமணம் நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி மணமகள் மருதாணி போட்டுக் கொண்டும் - பட்டுப்புடவை அணிந்தும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். நாதஸ்வரம் முழங்க தமிழ் முறைப்படி திருமண நடைபெற்றது.
திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், மணமக்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்களிடமும் தங்களது நண்பர்களிடமும் வாழ்த்துகளை பெற்றனர்.
திருமண விழாவில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழக பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.