சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்தது குறித்து...
உச்சநீதிமன்றம் / மு.க. ஸ்டாலின்
உச்சநீதிமன்றம் / மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (நவ. 3) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிவிப்புக்குத் தடை விதித்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் அதனை மேற்கொள்வது ஓட்டுரிமைக்கு எதிரானது என செயல் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு, நவ. 6 அல்லது 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

Summary

SIR DMK petition in the Supreme Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com