

இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையானது இல்லை எனவும் கட்சியின் நிலையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே கடந்த ஓராண்டாகவே பனிப்போர் நிலவியது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை செங்கோட்டையன் தவிர்த்து வந்த நிலையில், செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.