சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 97,000-ஐ கடந்த நிலையில், அதன்பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக அதிரடியாக குறைந்து வருகின்றது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 90,800-க்கும், ஒரு கிராம் ரூ. 11,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 90,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 11,250-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை இன்று காலை கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of gold jewellery in Chennai fell by Rs 800 per sovereign on Tuesday morning.
இதையும் படிக்க : பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









