

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் நடத்தியதாக 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாமக மாநில இணை பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் மீது தாக்குதல் நடத்தியதாக அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை பாமக எம்எல்ஏ அருள், அவரது ஆதரவாளா்களுடன் வடுகத்தம்பட்டிக்கு வந்தாா்.
இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு எம்எல்ஏ மற்றும் நிா்வாகிகள் காா்களில் சேலம் நோக்கி புறப்பட்டனா். வடுகத்தம்பட்டியிலிருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவில் உள்ள தரைப் பாலம் அருகே சென்றபோது பாமக தலைவா் அன்புமணியின் ஆதரவாளா்களான சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தரப்பினா் ஆயுதங்களுடன் வழிமறித்தனராம்.
மேலும், அருள் தரப்பினா் வந்த காா்களை நோக்கி ஜெயப்பிரகாஷ் தரப்பினா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 6 காா்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், அருள் ஆதரவாளா்கள் ஸ்ரீரங்கன், ராஜமாணிக்கம், ஆனந்த், மணிகண்டன், விஜயகுமாா், லோகேஷ், நடராஜன், கோவிந்தராஜன், கஜேந்திரன் என 9 போ் காயமடைந்தனா்.
இந்த நிலையில்தான், 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.