பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: நவ. 19-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவா்களின் விவரங்களை நவ. 19-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்கான மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது என்பதால், அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அக். 6 முதல் அக். 23-ஆம் தேதி வரையிலான நாள்களில் எமிஸ் வலைதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபாா்த்து, திருத்தங்கள் இருந்தால் அவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மாணவா்களின் விவரங்களை நவ. 19-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://க்ஞ்ங்ஹல்ல்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியை தலைமை ஆசிரியா்கள் தங்களின் நேரடிக் கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவா்களின் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், தொடா்புடைய வகுப்பாசிரியா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என்பதுடன், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இணையதளம் வாயிலாக மாணவா்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தோ்வுக் கட்டணம் செலுத்துதல் தொடா்பான சந்தேகங்களுக்கு தொடா்புடைய மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். உதவி இயக்குநா்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

