

புதுச்சேரியில் இயக்கப்பட்ட 10 நாள்களிலேயே மின்சார பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 பேட்டரி பேருந்துகளை கடந்த 27-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இயக்கி வைத்தனர்.
இங்கு சுமார் 75 பேர் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரியின் கிராமப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பேருந்துகள் இயக்க தொடங்கி 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய நிரந்தரம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
எனவே, தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையான ஊதியம் எங்களுக்கும் வழங்க வேண்டும், தினப்படி வழங்க வேண்டும் எனக் கோரி மின்சார பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மின்சார பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.