தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார்.
Edappadi Palaniswami
இபிஎஸ் (கோப்புப்படம்)IANS
Published on
Updated on
1 min read

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டையன் விவகாரம்: திமுக மீது சந்தேகம் எழுப்பும் நயினார் நாகேந்திரன்

இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has urged the immediate release of GST funds for the Constituency Development Fund.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com