

திருப்புவனமத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பசுவின் மீது வாகனம் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு அந்த பசுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் பைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திறந்தவெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும்போது பசுக்கள் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அது அவற்றின் வயிற்றில் சேரும்.
இந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கால்நடைகள் தங்குமிடங்களில் அடைத்து வைக்கப்பட வேண்டும். திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக்கூடாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.