

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
1. தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
2. கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
3. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
4. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும் இந்த ரயில்கள் நவம்பர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாக குருவாயூர் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.