எஸ்ஐஆர் விவகாரத்தில் திட்டமிட்டே மக்களை குழப்புகின்றனர்: திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் திட்டமிட்டே மக்களை குழப்புகின்றனர் என்று திமுக மீது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி.
கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி.
Published on
Updated on
2 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் திட்டமிட்டே மக்களை குழப்புகின்றனர் என்று திமுக மீது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையினரைக் கண்டு அஞ்சாமல் குற்றம் புரிபவர்கள் நடந்து கொள்கின்றனர். காவல் துறை ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா பாதுகாப்பு அளிக்கிறதா என்ற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இலலாத நிலை இருக்கிறது. போதைப்பொருள் அதிகரித்துள்ளது.

போதை ஆசாமிகளால் இந்த சம்பவஙகள் நடக்கின்றன. நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. வேண்டப்பட்டவர் வர வேண்டும் என்பதற்காக நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. டிஜிபி நியமனத்தில் இந்த அரசு முறையாக விதிகளை பன்பற்றவில்லை. யுபிஎஸ்சி 3 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியும் டி.ஜி.பி நியமனம் செய்யபப்டவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரபப்ட்டு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. ஏன் இந்த பாரபட்சம் பார்க்கின்றனர்.

எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சியமைக்கும். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டார். அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திட்டம்(எஸ்ஐஆர்) கொண்டு வரப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்கிறது.

எஸ்ஐஆர் என்றாலே பதறுகிறார்கள் ஏன் பதறுகிறார்கள். இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு மாதம் என்பது போதுமான காலம். இறந்தவர்கள் நீக்கபப்டக் கூடாது என்பது தி.மு.க வின் நோக்கம். தேர்தலின் போது திருட்டு ஓட்டு போட வசதியாக இருக்கிறது. அது தடுக்கப்படும் என்பதால் அதுதான் இவர்களுக்கு பயம். வாக்குகள் பறிபோகும் என அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கின்றனர். திட்டமிட்டே மக்ளை குழப்புகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது. எஸ்ஐஆர் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது- நிதியே ஒதுக்காமல் தி.மு.க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். செங்கோட்டையன் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 2026 பேரவைத் தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது இயல்பு என அவர் பதிலளித்தார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has accused the DMK of deliberately confusing the public regarding the special intensive revision of the voter list.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com