முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையை 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்ய சென்றனர்.
அணையை ஆய்வு செய்யச் செல்லும் கண்காணிப்புக் குழுவினா்.
அணையை ஆய்வு செய்யச் செல்லும் கண்காணிப்புக் குழுவினா்.
Published on
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணையை 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்ய திங்கள்கிழமை சென்றனர்.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு தற்போது புதிதாக 7 போ் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுத் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டாா்.

இந்த ஆணையமே முல்லைப் பெரியாறு அணை தொடா்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் எனவும் கடந்தாண்டு அறிவித்தது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

2 ஆம் முறையாக ஆய்வு: இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் முறையாக அணைப்பகுதியில் ஆய்வு செய்தது.

அதன் பின் இரண்டாவது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை, பராமரிப்பு , பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை ஆய்வு ஆய்வு செய்ய சென்றனர்.

இக்குழுவில் ராகேஷ் டோடேஜா( பேரிடர்/ மீள் தன்மை தில்லி), ஆனந்த் ராமசாமி(ICED, பெங்களூர் ), ஜெயகாந்தன்( தமிழ்நாடு அரசு செயலர்), பிஸ்வநாத் சின்கா( கூடுதல் தலைமைச் செயலர் கேரளம் ), சுப்பிரமணியன்(CTC தொழில் நுட்ப நிபுணர், தலைவர் ),பிரியோஷ் ( தலைமைப் பொறியாளர்) ஆகிய 7 பேர் அணை பகுதிக்கு தேக்கடியில் படகு துறையில் வழியாக தமிழக மற்றும் கேரளத்து சொந்தமான தலா இரு படகுகள் வழியாக சென்று ஆய்வு செய்ய சென்றனர்.

Summary

A 7-member monitoring team went to inspect the Mullaperiyar Dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com