சென்னையில் நடிகர் அஜித் வீடு, சத்தியமூர்த்தி பவன், ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
நாடு முழுவதுமே நாள்தோறும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் அது புரளியாக இருந்தாலும் சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னையிலும் சமீபமாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இசிஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீடு, ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆகிய இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்துள்ளது.
அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அது புரளி என தெரிய வந்துள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.