கிரிக்கெட் பேட், ஆட்டோ, விசில்... பொது சின்னம் கோரி தவெக மனு!

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்திருப்பது பற்றி...
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்Photo: X/CTR NirmalKumar
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளது. முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் கோரி முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதனடிப்படையில் முதல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

அதில், விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு, அதில் ஒன்றை அளிக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சின்ன ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவை டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Petition filed with the Election Commission seeking a common symbol!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com