

இந்தியாவுடன் நியாயமான மற்றும் வித்தியாசமான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளதால், வரி விதிப்பை குறைக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் திங்கள்கிழமை (உள்ளூர் நேரப்படி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”இந்தியாவுடன் வித்தியாசமான ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம். தற்போது அவர்கள் எங்களை நேசிக்கவில்லை. ஆனால், அவர்கள் மீண்டும் எங்களை நேசிப்பார்கள். நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ரஷியா எண்ணெய்யை கொள்முதல் செய்ததால் இந்தியா மீது அதிகளவில் வரி விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் ரஷிய எண்ணெய் கொள்முதலை கணிசமாக குறைத்துள்ளார்கள். எனவே, இந்தியா மீதான கூடுதல் வரியை விரைவில் குறைக்கப் போகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நவ. 5 ஆம் தேதி செய்தியாளர்களுடன் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், ”அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சில முக்கிய பிரச்னைகள் இருப்பதால், ஒப்பந்தம் இறுதியாக சிறிது காலம் எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.