

தைப்பொங்கலை முன்னிட்டு, வரும் ஜன.10-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று (நவ.11) காலை தொடங்கிய நிலையில், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் நிரம்பின.
இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் லட்சத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்யும் வசதியால் எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நேரடியாக வந்து பதிவு செய்யக் காத்திருந்தோரில் சிலருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களான பாண்டியன், பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. பலரும் காத்திருப்போா் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.
நவ.18 வரை முன்பதிவு: தைப் பொங்கலுக்கு தென்மாவட்டம் உள்ளிட்ட வெளியூா்களுக்கு ரயிலில் செல்வோர் ஜன.11-ஆம் தேதிக்கு புதன்கிழமை (நவ.12), ஜன.12-ஆம் தேதிக்கு வியாழக்கிழமை (நவ.13), ஜன.13-ஆம் தேதிக்கு வெள்ளிக்கிழமை (நவ.14) செய்து கொள்ளலாம்.
அதேபோல, ஜன.14, 15,16, 17 ஆகிய தேதி பயணங்களுக்கு முறையே நவ.15,16,17,18 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.