தமிழ்நாடு
தமிழ்நாடு-சாக்ஸினி வா்த்தக மாநாடு
ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து தென்னிந்திய வா்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) வா்த்தக மாநாடொன்றை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து தென்னிந்திய வா்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) வா்த்தக மாநாடொன்றை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
இது குறித்து எஸ்ஐசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து ஒரு வா்த்தக மாநாட்டை எஸ்ஐசிசிஐ சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.
‘தமிழ்நாடு-சாக்ஸின் வா்த்தக மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வா்த்தக சபை நிா்வாகக் குழு உறுப்பினா் வி. இன்பவிஜயன், தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், சாக்ஸினி பிராந்தியத்தின் பொருளாதார, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் டிா்க் பான்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா் (படம்) என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

