ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவிகோப்புப் படம்

3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகிய மூன்றுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த பேரவைத் தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றில் 9 மசோதாக்களுக்கு கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா மட்டும் திரும்பப் பெறப்பட்ட நிலையில், 17 மசோதாக்களில், தற்போது 5 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

Summary

Tamilnadu Governor RN Ravi approves 3 bills

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com