

தமிழகத்தில் இதுவரை 5.90 கோடி பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை 92.04%(5.90 கோடி) வாக்காளர்களுக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இதுவரை 92.04% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்காளர்களில் 5.90 பேர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி(6,41,14,582) வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்தீவு, கோவாவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்தமான் நிக்கோபாரில் 99.63% பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும்
சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணிகள் 90%க்கு மேல் முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தில் 87.54%, புதுச்சேரியில் 93.88% படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 48 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.